திமுக கூட்டணி -170 இடங்களில் வெற்றிபெறும்: மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் நம்பிக்கை..!!
திமுக தலைமையிலான கூட்டணி 170 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? முதல்வர் -நாளை முக்கிய ஆலோசனை!|
கரோனா தடுப்பூசி ஒரு வாரத்துக்கு மேல் இருக்காது. என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தனிமைப்படுத்தும் மையங்கள் அதிகரிக்க வேண்டும். கரோனா சிகிச்சைப்பிரிவில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை அரசு நியமிக்க வேண்டும்.
வேளச்சேரியில் தேர்தல் விதிமீறில் நடைபெற்றுள்ளதற்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கம் ஏற்புடையதாக இல்லை. யார் வேண்டுமானாலும் வாக்குப்பதிவு பெட்டிகளை எடுத்துச்செல்லலாம் என்றால் தேர்தல் ஆணையம் அலட்சியமாக செயல்படுகிறது என்பதை மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீ வில்லிபுத்தூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மறைவு வேதனையளிக்கிறது. இந்த தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். ஆளும் கட்சியினர் மீது புகார் கொடுத்தால் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்வதாக கூறுகிறார்கள், ஆனால் நடவடிக்கை எடுப்பதில்லை. பாஜக போட்டியிடும் தொகுதியில் ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த செய்தியையும் படிங்க…
12ம் வகுப்பு பொதுத்தேர்வு – நடைபெறுமா? ரத்தா?- நாளை விவாதிக்கப்படும்..!!
இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 170 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும், தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணியை மக்கள் வெறுகின்றனர்”. இவ்வாறு அவர் கூறினார்.