திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு கட்டாயம் ரத்து: உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி. - Tamil Crowd (Health Care)

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு கட்டாயம் ரத்து: உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி.

 திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு கட்டாயம் ரத்து: உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி.

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு கட்டாயம் ரத்து செய்யப்படும் என்று திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மதுரை வடக்குத் தொகுதி திமுக வேட்பாளர் கோ.தளபதியை ஆதரித்து மாநில இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செல்லூர் 50 அடி சாலையில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

  • கருணாநிதி மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். 
  • ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வைக் கொண்டு வர முடியவில்லை.

 அவரது மறைவுக்குப் பிறகு நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவில் இருந்த மாணவி அனிதா உட்பட 14 பேர் நீட் தேர்வுக்குப் பயந்து தற்கொலை செய்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை கட்டாயம் ரத்து செய்வோம்.

1 thought on “திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு கட்டாயம் ரத்து: உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி.”

Leave a Comment