தினம் ஒரு தகவல் :”கடவுளின் பூமி”-கேரளா காரணம்தெரியுமா?
கேரளா-“கடவுளின் பூமி”
என்று சொல்கிறார்கள் காரணம் என்ன?
விஷ்ணு எடுத்த 10 அவதாரங்களில் ஒன்று பரசுராமன்.
இவன் பெரிய போர்வீரன்.
இவன் தன் தந்தையை அழித்த சத்திரிய வம்சத்தின் மூன்று தலைமுறையை அழித்தான்.
ஷத்திரிய வம்சத்தை அழித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க, தன் ஆன்மா பரிசுத்தமாக பூமியின் விளிம்பு நிலை என சொல்லப்படும் கோகர்ணதில் தவம் இயற்றினான்.
அதன்மூலம் வருணபகவான் இடமும், பூமி தாயிடமும் வரம் பெற்றான்.
பின்னர் கன்னியாகுமரியை நோக்கி சென்றான்.
அங்குதன் ஏர் கலப்பையை கடலில் எறிந்தான்.
உடனே கடல் விலகியது.
அந்த நீர் விலகிய இடம் ‘பரசுராமன் பூமி‘ என்ற தெய்வீகம் பெருமையை பெற்றது.
அந்த இடம்தான் இப்போது’ கேரளா’ என்று அழைக்கப்படுகிறது அதனால்தான் கேரளாவை கடவுளின் பூமி என்று சொல்கிறார்கள்.