முதன்மை கல்விஅலுவலர்அறிவிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் மார்ச் 10க்குள் கொரோனா தடுப்பூசி மருந்து எடுத்துகொள்ள முதன்மை கல்விஅலுவலர் சத்தியமூர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளிலும்அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் தேர்தல் பணியில்ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களில் ஆசிரியர்கள் மட்டும் 8250 பேர்உள்ளனர். கொரோனா பரவலை தடுக்கவும் முன்னெச்சரிக்கையாகஅனைவரும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
நேற்று மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் சத்தியமூர்த்தி தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி உட்பட அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் 70 பேர்அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மருந்துஎடுத்துகொண்டனர். முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி கூறுகையில், அனைத்து வகை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலகபணியாளர்கள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையங்கள், அரசு மருத்துவமனையில் மார்ச் 10க்குள் கொரோனா தடுப்பூசி மருந்து எடுத்துகொள்ள வேண்டும்,’என்றார்