தேசிய வருவாய்த்தேர்வுகளுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு
அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு:
தேசிய வருவாய் மற்றும் தகுதிப் படிப்புதவி தொகை பெறுவதற்கான தேர்வுகளுக்கான விடைக்குறிப்புகளை மாணவர்கள் சரிபார்த்து 12ம் தேதிக்குள் தங்களின் ஆட்சேபணைகளை தெரிவிக்க வேண்டும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
ஆண்டு தோறும் நாடு முழுவதும் நடத்தப்படும் தேசிய வருவாய் மற்றும் தகுதி படிப்புதவி தொகை தேர்வு கடந்த 21ம் தேதி நடந்தது. தமிழகத்தில் பல ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை (Answer Key) தற்போது தேர்வுத்துறை தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.