தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவு- என்னென்ன தெரியுமா..??
தயிரில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. குடலில் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கும் தன்மை தயிருக்கு உண்டு. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் உருவாக்கும். தயிருடன் எந்த உணவு பொருட்களை சேர்த்து கொள்ள கூடாது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
- கீரை
- வாழைப்பழம்
- நட்ஸ்
- மருந்து மாத்திரை
- சோயா பீன்ஸ்
- மீன், கருவாடு
வயிற்றில் புண் இருப்பவர்களுக்கு தயிர் ஒரு அருமருந்தாகும். தயிரில் இவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தாலும் கூட தயிரை சாப்பிடுவதற்கு கால நேரம் என்பது உண்டு. தயிரில் இருந்து பெறப்படுவதுதான் மோர். மோரை தினமும் உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
தயிருடன் எந்த உணவு பொருட்களை சேர்த்து கொள்ள கூடாது:
கீரை:
உடம்பில் உள்ள இரத்த குழாய்களை சுத்தபடுத்தும் தன்மை மோருக்கு உண்டு. ஆனால் தயிர் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம். தயிருடன் கீரையை சேர்த்து சாப்பிடவே கூடாது. ஏனெனில் இரண்டுமே செரிமானம் ஆக அதிகநேரம் எடுத்துக்கொள்பவை. அதனால் தான் இந்த உணவு சேர்க்கையை தவிர்க்க வேண்டும்.
வாழைப்பழம்:
தயிரோடு வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடக்கூடாது. இவ்வாறு உண்டால் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இந்த இரண்டும் இரைப்பையின் குடல் இயக்கத்தை அதிகப்படுத்தக் கூடியது.
நட்ஸ்:
தயிரோடு நட்ஸ் -ஐ சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் இரண்டிலும் புரோட்டின் அதிகம். இது செரிமான மண்டலத்திற்கு அதிக அழுத்தத்தை கொடுக்கக்கூடியது.
மருந்து மாத்திரை:
சில பேர் தயிர் குடிக்கும்போது மருந்து மாத்திரைகளை சேர்த்து எடுத்துக் கொள்வார்கள். இது மிகவும் தவறு. இது வயிற்றில் அமில தன்மையை அதிகமாக்கி பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் இது நீங்கள் சாப்பிடும் மாத்திரையின் வீரியத்தை குறைத்துவிடும்.
சோயா பீன்ஸ்:
தயிருடன் சோயா பீன்ஸை சேர்த்து எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் தயிரில் உள்ள கால்சியத்தை நம் உடம்பு உறிவதை சோயா பீன்ஸில் உள்ள ஒரு இராசயனம் தடுக்கும். இதனால் நம் உடம்பில் கால்சியம் குறைபாடு ஏற்படும்.
மீன், கருவாடு:
மீன், கருவாடு போன்றவை சாப்பிடும்போது தயிரை சேர்த்து சாப்பிடக்கூடாது. இது உடம்பிற்கு கேடு விளைவிக்கும்.
இந்த செய்தியையும் படிங்க…
வெள்ளை பூஞ்சை உடலில் எந்த பகுதியை பாதிக்கும் ..?? கருப்பு பூஞ்சை விட இது ஆபத்தானதா..??
ஏனெனில் தயிரில் கால்சியம் சத்து அதிகம். மீனில் இரும்புச்சத்து அதிகம். இந்த இரண்டு உணவும் ஒரே நேரத்தில் வயிற்றுக்குள் சென்றால் வயிறு செரிமானம் ஆக கடினமாக இருக்கும். இது ஜீரண உறுப்புகளுக்கு அதிக வேலைகளை தரக்கூடிய ஒரு செயல்.