தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு 20% இடஒதுக்கீடு: தேர்வாளர்களின் விவரங்களை அளிக்க உத்தரவு..!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:
‘கடந்த ஜனவரி.,3 ம் தேதி தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 1(Group-1) பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களில் தமிழ் வழியில் பயின்றதாக தனது இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்த செய்தியும் படிங்க…
வரும் 5 ம் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ள அதற்கான படிவத்தில், 16 ம் தேதி முதல் செப்., 16 ம் தேதி வரையில் ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் ‘டிவி’ நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
1. பள்ளி முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிப்பு சான்றிதழ்.
2. மேல்நிலை முதல் மற்றும் 2-ம் ஆண்டு அல்லது பட்டயப்படிப்பு சான்றிதழ்.
3. பட்டப் படிப்பு சான்றிதழ். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றதாகக் குறிப்பிட்டு முதல் நிலைத் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும்.
இவைதவிர தேர்வாணையத்தின் இணையதளம் மூலமாகவும் இதுகுறித்த தகவல்களை 5 ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு 20% இடஒதுக்கீடு: தேர்வாளர்களின் விவரங்களை அளிக்க உத்தரவு:
அரசு வேலைவாய்ப்பில் தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு 20% இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக TNPSC, தேர்வாளர்களின் விவரங்களை அளிக்கக் கோரியுள்ளது.
தமிழ்நாட்டில் தமிழ்வழியில் 1ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றோருக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கடந்த 20ம் தேதி உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ் வழியில் பயின்றவர்களின் விவரங்களை அறிய, தேர்வாளர்களின் விவரங்களை அளிக்குமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியும் படிங்க…
அரசு ஊழியர்களின் ஒய்வு வயது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்..!!
இதன்படி, குரூப் 1 முதல்நிலைத் தேர்வை எழுதியவர்கள் தாங்கள் 1-ம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி படித்ததற்கான சான்று, PLUS ONE, PLUS TWO அல்லது பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்ததற்கான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 16ம் தேதி வரைஇணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்:
வரும் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 16ம் தேதி வரை தேர்வாளர்கள் தங்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். ஒரு வேளை, தமிழ்வழிக் கல்வி பயின்றதாகக் குறிப்பிட்டு தேர்வு எழுதியவர்கள் அதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்யாவிட்டால் அவர்கள் வேலை வாய்ப்பில் உரிமை கோர முடியாது.