தமிழ்நாட்டில் முக்கிய மாவட்டத்தில் AUG 02- முதல் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமல்..!!
கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே :
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பால், மருந்த கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே கோவையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியும் படிங்க…
தமிழகத்தின் முக்கிய கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆக.8 வரை தடை..!!
கடைகள் ஞாயிற்றுக்கிழமை செயல்பட தடை:
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய தெருக்களில் உள்ள கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில்லரை வியாபாரத்திற்கு அனுமதி இல்லை:
உணவகங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து சாப்பிட வேண்டும். காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரத்திற்கு மட்டுமே அனுமதி என்றும் சில்லரை வியாபாரத்திற்கு அனுமதி இல்லை.
பக்தர்கள் வருவதற்கு தடை :
அதேபோல் கோவையில் உள்ள முக்கிய கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், ஆகம பூஜைகள் மட்டும் நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் :
பிற மாநிலத்தில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே கோவை மாவட்டத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இ-பதிவு:
கோவை எல்லைக்குள் பிற மாநிலத்தில் இருந்து வருபவர்கள் வருபவர்கள் இபதிவு செய்திருந்தால் போதும். நோய் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் இவ்வாறு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.