தமிழ்நாடு சட்டப்பேரவை JUNE 21 கூடுகிறது..!!
DMK தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவை, JUNE 21 முதல்முறையாக கூடுகிறது.
தமிழ்நாட்டில், சட்டப்பேரவை தேர்தலில் DMK வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த செய்தியும் படிங்க…
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய அரசு பரிசீலனை-அரசு ஊழியர்கள் நம்பிக்கை..!!
பின்னர் பல்வேறு துறை அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். சட்டப்பேரவை தலைவராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், சென்னை கலைவாணர் அரங்கில், ஆளுநர் உரையுடன் JUNE 21 தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத் தொடரும் கலைவாணர் அரங்கிலேயே நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, சட்டப்பேரவைக்கு வரும் அனைத்து MLAக்கள், அலுவலர்கள், ஊழியர்களுக்கும் CORONA பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.