தமிழக ரேஷன் கடை: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- வணிகவரித்துறை அமைச்சர்..!!
ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இந்த செய்தியும் படிங்க…
RDO அலுவலகங்கள் நவீனமயமாக்க செயல் திட்டங்கள்: அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்..!!
தமிழகத்தில் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால் தமிழக அரசு சில தளர்வுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன. ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக எந்த பாதிப்பையும் சந்திக்க கூடாது என ரேஷன் கடைகளில் மக்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமானதாக இல்லை என மக்கள் குற்றம் சாட்டி இருந்தனர். குறிப்பாக கூலி வேலை செய்பவர்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை உணவாக சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.
அவர்கள் அனைவரும், ரேஷன் கடைகளில் அரிசி தரமானதாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதை அடுத்து வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.