தமிழக மின்வாரியத்தில் 5300 வேலைவாய்ப்பு-விண்ணப்பிக்க மறுவாய்ப்பு..!!
தமிழகத்தின் மின்வாரியத்தின் உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் போன்ற பணிகளுக்கு தேர்வு நடத்துவது குறித்தும், அத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மறு வாய்ப்பு அளிக்குமாறும் அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் மின்சார வாரியத்திற்கான பணியாளர்கள் மின்வாரியம் நடத்தும் தேர்வின் மூலம் நியமனம் செய்யப்படுகிறார்கள். கடந்த 2020ம் ஆண்டுக்கான மின்வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பெறப்பப்பட்டது. அதன்படி, 600 உதவி பொறியாளர், 500 இளநிலை உதவியாளர் கணக்கு, 1,300 கணக்கீட்டாளர் பணியிடங்கள் 2020ம் ஆண்டுக்கான காலியிடங்கள் ஆகும்.
இந்த செய்தியையும் படிங்க…
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு-தமிழக அரசு அறிவிப்பு..!!
2021ம் ஆண்டு துவக்கத்தில் கள உதவியாளர் பணிக்கு 2,900 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்றின் தாக்கத்தின் காரணமாக இந்த பணிகளுக்கான தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து ஆட்சி மாற்றமும் நடந்துள்ளது. இதனால் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த 5,300 பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படுமா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. அப்படி நடத்தப்பட்டால், முன்னதாக விண்ணப்பிக்காதவர்களுக்கு விண்ணப்பிக்க மறுவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளது.