தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் அதிகாரத்தையும்- IAS அதிகாரி கவனிப்பார்' ..!! - Tamil Crowd (Health Care)

தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் அதிகாரத்தையும்- IAS அதிகாரி கவனிப்பார்’ ..!!

தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் அதிகாரத்தையும்- IAS அதிகாரி கவனிப்பார்’ ..!!

பள்ளிக்கல்வி இயக்குநருக்கான அதிகாரத்தை ஆணையரிடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ள சம்பவம், பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. 

150 ஆண்டு பழமையான பதவி:

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி சாலையில் பள்ளிக்கல்வி வளாகம் செயல்படுகிறது. 1854 ஆம் ஆண்டு முதல் இந்த வளாகம் இயங்கி வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கல்விக்கான தேவைகளை நிவர்த்தி செய்வதில் பள்ளிக் கல்வி இயக்குநரின் பங்கு மிக முக்கியமானது.

இந்நிலையில், கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் என்றொரு பதவி உருவாக்கப்பட்டது. இதன் ஆணையராக சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டார். 

இந்த செய்தியையும் படிங்க….

 கொரோனா வந்தவர்களுக்கு -அரசின் புதிய நெறிமுறைகள் என்னென்ன..??  

இந்நிலையில், `பள்ளிக்கல்வி இயக்குநரின் முழு அதிகாரத்தையும் பள்ளிக்கல்வி ஆணையர் கவனிப்பார்’ என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் ஆணையராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அனைத்து இயக்குநர் பதவிகளும் அகற்றமா?

பள்ளிக்கல்வி இயக்குநர் பதவி மட்டுமல்லாமல், மெட்ரிக் பள்ளி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர், முறைசாரா கல்வி இயக்குநர், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளும் அகற்றப்பட்டு இந்தப் பொறுப்புகள் அனைத்தும் பள்ளிக்கல்வி ஆணையரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவ்வாறு செயல்பட்டால் அதைவிட பெரிய அபத்தம் இருக்க முடியாது. பள்ளிக்கல்வி இயக்குநர் பதவியில் ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட வேண்டும். இதை உணர்ந்து பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இதுவரை இருந்த நிலையே தொடரும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்,’ என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்புமணி  தெரிவித்துள்ளார்.

சீமான்:

“பள்ளிக்கல்வி நிர்வாகத்தை, பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர், தலைமை ஆசிரியர், வட்டாரக் கல்வி அலுவலர், மண்டலக் கல்வி அலுவலர் என அனுபவம் சார்ந்து படிப்படியாகப் பொறுப்பு உயர்வு பெற்றுதான் பள்ளிக்கல்வி இயக்குனராக முடியும். இப்படி அனுபவம்மிக்க, நிர்வாகத்திறன் வாய்ந்த ஒரு பொறுப்பினை முற்றாக ரத்துசெய்து ஆணையமாக மாற்ற அரசாணை வெளியிட்டிருப்பது மிகத்தவறான நிர்வாக முடிவாகும். பள்ளிக்கல்வி இயக்குனர் பொறுப்பை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக அவரது பொறுப்புகளை பள்ளிக்கல்வி ஆணையரே மேற்கொள்வார் என்பது ஏற்கத்தக்கதல்ல.

பள்ளிக்கல்வி ஆணையர் பதவி என்பது ஐ.ஏ.எஸ் படித்த நிர்வாக அதிகாரிகளுக்கானது. அவர்களுக்கு பள்ளிக்கல்வி முறைமை குறித்தும் பள்ளி ஆசிரியர்களின் சிக்கல்கள், மாணவ மாணவியரின் தேவைகள், பாடத்திட்டச் சிக்கல்கள் குறித்த அடிப்படை அனுபவ அறிவும், நடைமுறைச் சிக்கல்கள் சார்ந்த தீர்வுகள் எடுக்கும் திறனும் இருக்கும் என எதிர்பார்ப்பது தவறானது.

எனவே, பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை மூடிவிட்டு அதை ஆணையமாக மாற்றும் தமிழக அரசின் முடிவு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் அச்சப்படுவது முழுக்க முழுக்க நியாயமானது. அதுவும் பள்ளிக்கல்வி இயக்குனர் பதவியை ரத்து செய்வது குறித்து பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறையைச் சார்ந்த நிர்வாகிகள் இவர்களுக்கிடையே எந்தக் கருத்து கேட்புக் கூட்டமும் நடக்காத சூழலில் தமிழக அரசு திடீரென இம்முடிவை அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது” என்கிறார்.

அரசின் முடிவு வரவேற்கத்தக்கது:

“பள்ளிக்கல்வி இயக்குநருக்கான அதிகாரம் ஆணையரிடம் ஒப்படைக்கப்படுவது சரியானதா?’

 -மூத்த கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.

அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. பள்ளிக் கல்வி இயக்குநரால் எந்த முடிவுகளையும் விரைவாக எடுக்க முடிவதில்லை. ஓர் ஐ.ஏ.எஸ் IAS அதிகாரி அமைச்சரிடம் பேசுவதற்கும் ஆட்சிப் பணியில் இல்லாத ஓர் அதிகாரி அமைச்சரிடம் பேசுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. 

அனைத்து மண்டலங்களிலும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி விரைவாக முடிவுகளை எடுப்பதற்கு திறமையான ஓர் அதிகாரி தேவைப்படுகிறார். இதற்காக துறைரீதியான அனுபவங்களைக் கொண்டவர்கள்தான் நியமிக்கப்பட வேண்டும் என்பது சரியான வாதம் அல்ல” என்கிறார்.

இந்த செய்தியையும் படிங்க….

திருமண விழா –  (TN eRegistration) :தமிழக அரசு புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது..!! 

 பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்குக் கீழ் உதவி செய்வதற்கு துணை இயக்குநர் அந்தஸ்திலான அதிகாரிகளை நியமித்துக் கொள்ளலாம். தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் இயக்குநராக ஐ.ஏ.எஸ் IAS அதிகாரிதான் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கே ஓர் ஐ.ஏ.எஸ் IAS அதிகாரி இருக்கும்போது, பள்ளிக்கல்வித் துறைக்கு ஐ.ஏ.எஸ் IAS அதிகாரி நியமிக்கப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும்? அரசுத் துறையில் விரைவான முடிவுகளை எடுப்பதற்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி இருப்பதை அவசியமானதாகப் பார்க்கிறேன்” என்கிறார்.

Leave a Comment