தமிழக பட்ஜெட் 2022 - முக்கிய அறிவிப்புகள் என்னென்ன - முழு தகவல்கள்..!! - Tamil Crowd (Health Care)

தமிழக பட்ஜெட் 2022 – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன – முழு தகவல்கள்..!!

 தமிழக பட்ஜெட் 2022 – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன


 – முழு தகவல்கள்..!!

தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 2வது காகிதம் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்த பின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரை நிகழ்த்தியது பின்வருமாறு..

கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது திமுக அரசு பொறுப்பேற்றது. கொரோனா பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தியதுடன் தேர்தல் வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றியது.

*நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி முதல்வரின் செயல்பாட்டிற்கான அங்கீகாரம்.முதல்வர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. மாநில அரசின் உரிமைகளுக்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும்.

*தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை வரும் ஆண்டில் ரூ.7,000 கோடிக்கும் மேல் குறைகிறது. 2014 முதல் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே வந்தது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக வருவாய் பற்றாக்குறை குறைகிறது.

*தமிழக பட்ஜெட்டில்பள்ளி கல்வித்துறைக்கு 36 ஆயிரத்து 736  கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இல்லம் தேடிக் கல்விக்கு 200 கோடி ஒதுக்கீடு.

* முன்மாதிரி பள்ளிகள் தொடங்க 120 கோடி ஒதுக்கீடு.

*கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1000 ஊக்கத் தொகை! 

*தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 4.16%-ல் இருந்து 3.08%ஆக குறையும்.

* தமிழ்நாடு ஒலிம்பிக் தங்க பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு 

*முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு ரூ. 817 கோடி நிதி ஒதுக்கீடு 

*முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கு ₨1,547 கோடி நிதி 

*மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₨17,901 கோடி நிதி ஒதுக்கீடு

*புத்தகக் காட்சிகள், இலக்கியத் திருவிழாக்கள் நடந்த ரூ.5.6 கோடி நிதி ஒதுக்கீடு

*உயர்தர மனநல சேவை வழங்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ₨40 கோடி நிதி ஒதுக்கீடு – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 

*காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனை மேம்பாட்டிற்கு ₨120 கோடி நிதி ஒதுக்கீடு 

*சென்னை ஆர்.கே.நகரில் புதிய விளையாட்டு வளாகம் ₨10 கோடியில் அமைக்கப்படும் – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 

*தாமிரபரணி படுகையில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் 3,200 ஆண்டுகள் பழமையானதாகும்.

*தாமிரபரணி ஆற்றுப் படுகை தொல்பொருட்கள் மூலம், தமிழர் தம் வரலாறு மீண்டும் உறுதியாகியுள்ளது.

*முதல்வரின் முகவரி என்ற புதிய துறையின் மூலம் 10.01 லட்சம் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.

*சமூக ஊடகங்களில் செயல்படும் தவறான பிரசாரங்களைத் தடுக்க, சமூக ஊடக சிறப்பு மையம்

*ஜிஎஸ்டி (GST) வரி நடைமுறை மூலம், மாநில அரசின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

*அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ₹15 கோடி செலவில் பாட புத்தகங்கள் வழங்கப்படும்

Leave a Comment