தமிழகம் உட்பட- 5 மாநிலங்களில் தொடங்கியது :வாக்கு எண்ணிக்கை..!! - Tamil Crowd (Health Care)

தமிழகம் உட்பட- 5 மாநிலங்களில் தொடங்கியது :வாக்கு எண்ணிக்கை..!!

 தமிழகம் உட்பட- 5 மாநிலங்களில் தொடங்கியது :வாக்கு எண்ணிக்கை..!!

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை காலை 8 மணி முதல் வாக்குகளை எண்ணத் தொடங்கி, மாலை அல்லது இரவுக்குள் முடிவடையும்.

இந்த செய்தியையும் படிங்க……

ஸ்டாலின் அமைச்சரவையில்- இந்த 3 சமூகங்களுக்குத்தான் முக்கியத்துவம்..!! 

இந்நிலையில்,தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன்பின் மின்னணு வாக்குகள் எண்ணப்படும். தமிழகத்தில் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 75 மையங்களிலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஒரு மையத்திலும் ஆக மொத்தம் 76 இடங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக இந்த வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன் அனைத்து ஈவிஎம் மற்றும் VVPAT இயந்திரம் சுத்திகரிக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள் அனைவருக்கும் முகமூடிகள், முகக்கவசங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் யார் ஆட்சியமைக்கப்போவது என்று மக்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர்.

Leave a Comment