அதிக தடுப்பூசி செலுத்திய டாப் 10 மாநிலங்கள்: தமிழகத்துக்கு இடமில்லை!
அதிக கொரோனா தடுப்பூசிகள் செலுத்திய டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. ஆனால், அதிக பாதிப்படைந்த மாநிலங்கள் வரிசையில் 5ம் இடம் பிடித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றில் இருந்து நம்மை காப்பாற்றும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என, மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
Mucormycosis: யாருக்கெல்லாம் ஆபத்து அதிகம்? தற்காப்பாக எதை செய்யலாம்? எதை செய்யக்கூடாது?
இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தற்சமயம் பயன்பாட்டில் உள்ளது. இன்றைய (மே 13) நிலவரப்படி 13.76 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 4 கோடி பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் பெற்று முழு பாதுகாப்புடன் உள்ளனர். இந்த 13.76 கோடி பேரில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 40.3%. 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் எண்ணிக்கை 45.6%. 30 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் எண்ணிக்கை 9.2% ஆக உள்ளது. இது தவிர 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 4.9% பேரும் இதில் அடக்கம். 66.73% தடுப்பூசிகள் பத்து மாநிலங்களின் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மஹா., மாநிலம் தான், தடுப்பூசி போடுவதிலும் முதலிடத்தில் உள்ளது. அங்கு 1.8 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த எண்ணிக்கையில் 10.7% ஆகும். 1.46 கோடி தடுப்பூசி போட்டு 2ம் இடத்தில் ராஜஸ்தான், 1.45 கோடி தடுப்பூசிகள் வழங்கி மூன்றாம் இடத்தில் குஜராத்தும் உள்ளன. மேலும் உ.பி., மே.வங்கம், கர்நாடகா, ம.பி., பீகார், கேரளா, ஆந்திரா ஆகியவை வரிசையாக டாப் 10ல் இடம்பெற்றுள்ளன.
முடி உதிர்வு, பொடுகு தொல்லை இனி இல்லை..!!
மருத்துவ கட்டமைப்பில் சிறந்து விளங்குவதாக கூறப்படும் தமிழகம் இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. ஆனால் தமிழகம் மற்றொரு டாப் 10 பட்டியலில் 5ம் இடம் பிடித்துள்ளது. அது அதிக பாதிப்பு கொண்ட மாநிலங்கள் பட்டியல் ஆகும். ‘தடுப்பூசி பற்றி பரப்பப்பட்ட வதந்திகள் தான் தமிழகத்தின் இந்நிலைக்கு காரணம்’ என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.