தமிழகத்தில் JUNE 20 முதல் ரயில்கள் இயக்கம்-SOUTHERN RAILWAY ..!!
தமிழகத்தில் JUNE 20ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டிருக்கும் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று SOUTHERN RAILWAY அறிவித்திருக்கிறது.
CORONA தொற்றின் பரவல் நாளுக்கு நாள் குறைந்து வரும்நிலையில், போக்குவரத்துக்கு தளர்வு அளிக்க முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். JUNE 21ம் தேதி முதல் பேருந்து மாவட்டங்களுக்குள் முதற்கட்டமாக இயக்கப்படும் என்று தகவல்.
இந்த செய்தியும் படிங்க…
கல்வித் தொலைக்காட்சியில் (2021-2022) பாடங்கள்:முதல்வா் (JUNE 19) தொடக்கி வைக்கிறாா்..!!
இந்நிலையில் JUNE 20ம் தேதி முதல் முதற்கட்டமாக 10 சிறப்பு ரயில்களை இருவழிகளிலும் இயக்க SOUTHERN RAILWAY முடிவெடுத்து அறிவித்திருக்கிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர், கொல்லம், ராமேஸ்வரம், திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கும், சென்னை செண்ட்ரலில் இருந்து கோவை , ஆலப்புழா, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாகவும் ரயில்கள் இயக்கப்படுகிறது.