தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை
மையம் அறிவிப்பு..!!
தமிழகத்தில் 4 நாட்களுக்கு லேசான முதல் மிதமானது மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல்.
கேரளா கடல்பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21-ம் தேதி:
மேற்கு, தெற்கு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. தென் மாவட்டங்கள் ,
கோவை,
நீலகிரி,
திருப்பூர்
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மிதமான மழை பெய்யக்கூடும்.
22-ஆம் தேதி:
தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,
23-ஆம் தேதி:
திருப்பூர், நீலகிரி மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பிப்.24-ஆம் தேதி :
தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். மேலும், சென்னையை பொறுத்தளவில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் பனிமூட்டத்துடன் காணப்படும் என்பது குறிப்பிடப்படுகிறது.