தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள்: எதற்கெல்லாம் அனுமதி இல்லை..?? இன்று அறிவிப்பு..!!
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஒரு நாள் தொற்றின் அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. சென்ற ஆண்டு இருந்ததைவிட, கொரோனா தொற்றின் இந்த வேறுபாட்டின் பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. தொற்று பரவும் வேகமும் மிகவும் அதிகமாகவுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
கரோனா நோயாளிகள்- மூச்சுத் திணறலை சமாளிப்பது எப்படி?- மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம்..!! |
தமிழகத்திலும் (Tamil Nadu) தொற்றின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு நாள் பாதிப்பு 13 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், மே மாதம் இந்த அளவுகள் உச்சத்தை எட்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர், தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்தது. இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு, குடும்ப நிகழ்ச்சியில் குறிப்பிட்ட அளவிலான மக்கள் என பலவித கட்டுப்பாடுகள் விதிகப்பட்டன.
எனினும், இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதும், தொற்றின் அளவில் சரிவைக் காண முடியவில்லை. நேற்று பிரதமருடனான ஆலோசனையில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கலந்துகொண்டு தேவையான விவரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami), தமிழக தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோருடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தொற்று (Coronavirus) பரவலைத் தடுக்க, மேலும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை இந்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த செய்தியையும் படிங்க….
ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு- விழிப்புணர்வு பணி ? – தினமலர் செய்தி..!!
என்னென்ன கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படக்கூடும்:
– இரவு ஊரடங்கின் கால அளவு நீட்டிக்கப்படலாம். தற்போது இது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை உள்ளது.
– காய்கறிக் கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட பிற வணிக நிறுவனங்கள் தற்போது இரவு 9 மணி வரை திறந்திருக்கிறது. இந்த நேரத்தை அரசு மேலும் குறைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
– வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதிலும் புதிய கட்டுப்பாடுகளில் தடை விதிக்கப்படலாம்.
– வீட்டிலிருந்து பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்படலாம்.
– தற்போது ஞாயிறன்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சனிக்கிழமையும் சேர்க்கப்பட்டு வார இறுதி நாட்களுக்கான ஊரடங்கு அறிவிக்கப்படலாம்.
– மால்கள், திரையரங்குகள் மூடப்படலாம்.
– வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு மின் முன்பதிவு கட்டாயமாக்கப்படலாம்.