தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் (LOCK DOWN)ஊரடங்கு நீட்ப்பு; தளர்வுகள் அறிவித்து முதல்வர் உத்தரவு..!! - Tamil Crowd (Health Care)

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் (LOCK DOWN)ஊரடங்கு நீட்ப்பு; தளர்வுகள் அறிவித்து முதல்வர் உத்தரவு..!!

 தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் (LOCK DOWN)ஊரடங்கு நீட்ப்பு; தளர்வுகள் அறிவித்து முதல்வர் உத்தரவு..!!

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு(LOCK DOWN) நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கு வரும் 7 -ஆம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில், தமிழகத்தில் 14 -ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது:

  1. கோவை, 
  2. திருப்பூர், 
  3. நீலகிரி, 
  4. ஈரோடு, 
  5. சேலம் ,
  6.   கரூர், 
  7. நாமக்கல், 
  8. தஞ்சாவூர், 
  9. திருவாரூர்,
  10.  நாகப்பட்டினம்,
  11.  மயிலாடுதுறை

 ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது.

செயல்பட அனுமதிப்பட்டுள்ள நிறுவனங்கள்:

* தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடுதலாக கீழ்கண்ட செயல்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 ம ணி வரை செயல்பட அனுமதி

* காய்கறி பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட் அனுமதி.

* மீன் சந்தகளை மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதி.

* இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி.

* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி.

* அனைத்து அளுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்படஅனுமதி.

* சார் பதிவாளர் அளுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* மின் பணியாளர் பிளம்பர்கள், கணினி மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ஆ-பதிவுடன் பணிபுரிய அனுமதி.

* மின் பொருள்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

* மிதிவண்டி மற்றும் இருசக்ர வாகனங்கள் பழுதி நீக்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

* ஹார்டுவேர் கடைகள் செயல்பட அனுமதி.

* வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் மாலை 5 மணி செயல்பட அனுமதி.

* கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுபொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட அனுமதி.

* வாகன விநியோகப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) செயல்பட அனுமதி.

* வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதி. மேலும் வாடகை டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று நபர்களும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பேர் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment