தமிழகத்தில்-புதிய தளர்வுகள் குறித்த அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

தமிழகத்தில்-புதிய தளர்வுகள் குறித்த அறிவிப்பு..!!

 தமிழகத்தில்-புதிய தளர்வுகள் குறித்த அறிவிப்பு..!! 

தமிழகத்தில் Corona பாதிப்பு குறைந்து வரும் நிலையில் புதிய தளர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியும் படிங்க…

 புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய அரசு பரிசீலனை-அரசு ஊழியர்கள் நம்பிக்கை..!! 

Full Lockdown-ன் பலனாக தமிழகத்தில் தற்போது Corona பாதிப்பு குறைந்து வருகிறது. அதிகபட்சமாக ஒருநாள் பாதிப்பு 36,000-ஐ கடந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 9,000-க்கும் குறைவாக பதிவாகி வருகிறது.. இதனையடுத்து பல்வேறு தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது..

அந்த வகையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய Lockdown  அமலில் உள்ளது.. இந்த ஊரடங்கு June 21-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்..

Corona  பாதிப்பு குறைவாக மற்ற மாவட்டங்களில் 50 சதவீத பஸ்களை இயக்கவும் அதில் 50 சதவீத இருக்கைகளில் பயணம் செய்ய அனுமதிக்கலாம் என்று மருத்துவர் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும் ஜவுளி கடைககள், கோவில்களை திறக்க அனுமதி போன்ற புதிய தளர்வுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.

இந்த செய்தியும் படிங்க…

வீட்டை விட்டு வெளியே செல்வோர் தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!! 

Corona  பரவல் விகிதம் அதிகம் உள்ள கோவை, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தொடர மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் Corona தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் பெரிய கடைகள், மால்களை திறக்க மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது. எனினும் என்னென்ன புதிய தளர்வுகள் வழங்கப்படலாம் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது..

Leave a Comment