தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்..!!
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இந்த செய்தியையும் படிங்க…
காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் பள்ளிகள் செயல்பட வேண்டும்:
மாணவர்களுக்கு வகுப்புகள் மாலை 3.30 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று அமைச்சர் மகேஷ் உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையில் பள்ளிகள் திறந்த நான்கு நாட்களில் அடுத்தடுத்து மாணவிகளுக்கு கொரோனா உறுதியாகும் நிலையில் சென்னை உட்பட்ட நகர்புறங்களில் இயங்கும் பள்ளிகள் காலை 8:30 மணி முதல் மாலை 3.30 மணி வரையும், மற்ற பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.