தமிழகத்தில் நீட் தேர்வுக்கு: மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே நீட் தேர்வு எழுதும் வகையில் கூடுதல் மையங்கள், அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக்தில் நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த சமயத்தில் கொரோனா பரவல் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதால், நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்கள் அமைக்க தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே நீட் தேர்வு எழுதும் வகையில் மையங்களை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் நீட் தேர்வுக்கான 28 மையங்களும், புதுச்சேரியில் 1 மையம் மட்டுமே இருக்கிறது. நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட மையங்கள் இருந்தாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் வெளிமாநிலத்திற்கு சென்று தேர்வு எழுதும் நிலைமை உள்ளது.
பொதுநல வழக்கு:
எனவே, கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கவேண்டும் என்றும் விழுப்புரத்தை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழகம் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களில் விண்ணப்பிக்கும் மாணவர்கள், அவர்கள் மாநிலத்திலேயே தேர்வு எழுதும் வகையில் கூடுதல் மையங்கள் அமைக்கவேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தது.