தமிழகத்தில் நாளை முதல் வங்கி சேவை -நேரம் குறைப்பு..!!
கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் நாளை முதல் வங்கிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மாநில வங்கியாளர்கள் குழுமம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணிவரை மட்டுமே செயல்படும். கர்ப்பணிகள், உடல்நலன் பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்.
இந்த செய்தியையும் படிங்க…
இன்று முழு ஊரடங்கு: என்னென்ன இயங்கும்..?? என்னென்ன இயங்காது..??
ஏடிஎம்(ATM)கள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்படும். தகுதி வாய்ந்த பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். வங்கியில் உள்ள பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினியை கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.