தமிழகத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை: எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள்..!! - Tamil Crowd (Health Care)

தமிழகத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை: எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள்..!!

 தமிழகத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை: எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள்..!!

கேரளாவை தொடர்ந்து தமிழகத்தில் தொடங்கிய  தொடங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து, தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்:

1. தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்படும் இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து அங்கு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசு உத்தரவு

2. நிவாரணம் வழங்குதல், மக்களை இடம்பெயரச் செய்தல், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க மண்டல அளவில் குழு அமைக்க உத்தரவு

3. உயிர்வாழ் மருத்துவ உபகரணங்கள் இருப்பு, மழையால் சேதமடையும் மரங்களை அகற்ற முன்கூட்டியே தயார் நிலையில் இருக்க வேண்டும்

4. மாவட்ட மற்றும் தாலுகா அளவில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்

5. அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு முன்கூட்டியே மீட்பு படைகள் அனுப்பி வைக்க வேண்டும்

6. புயல், வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பாகவே நிவாரண முகாம்கள், ஆதரவற்றவர்களை தங்கவைக்கும் முகாம்கள் கண்டறியப்பட வேண்டும்

7. போதுமான மருந்துகள் இருப்பு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்

8. பெண்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்

9. கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடைகளை பாதுகாக்க தேவையான முகாம்கள் அமைக்கப்பட வேண்டும்

10. தனியார் மற்றும் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ்கள் எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்

11. குளங்கள், நீர் நிலைகள், அணைகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும்

12. கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை நிவாரண முகாம்களில் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்

 இந்த செய்தியையும் படிங்க…

Leave a Comment