தமிழகத்தில் திமுக ஆட்சியமைக்கும்- டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு..!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. அதில் 71.43 சதவிகித வாக்குகள் பதிவானது. வாக்கு எண்ணிக்கை வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது.
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் அமமுக சார்பில் டி.டி.வி தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் உள்ளிட்டோர் முதல்வர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனா பாதுகாப்பு காரணங்களால், -தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு..!!
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பை டைம்ஸ் நவ் நடத்தி வெளியிட்டுள்ளது.
திமுக: 160-172 அதிமுக: 58-70 அமமுக: 0-4 மக்கள் நீதி மய்யம்: – நாம் தமிழர்: –