தமிழகத்தில் கொரோனா தொற்று-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை.
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, தஞ்சை உட்பட 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.