தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு-தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் உத்தரவி பிறப்பித்துள்ளார்.
அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். வரும் மக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என பரிசோதிக்க வேண்டும்.
நிறுவனங்கள், பள்ளிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், சுற்றுலாத்தளங்கள் என அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து உடல் வெப்ப நிலையை கண்காணிக்க வேண்டும்.
கட்டுப்பாட்டு பகுதிகளில் மக்கள் வெளியே வராமல் இருக்க நடவடிக்கை தேவை. காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
தகுதி வாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை கடந்த ஆண்டைப் போல் கண்காணிக்க வேண்டும்.
மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைவரும் முக்கவசம் அணிய வேண்டும். அதே போல் அரசியல் கூட்டங்களுக்கு வருபவர்கள் முக்கவசம் அணிவதை கட்டாயம் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இரவு ஊரடங்கு வெளி மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அதுகுறித்து அறிவிப்பு இதுவரை வெளியாக வில்லை.