தமிழகத்தில் கருப்பு பூஞ்சை(BLOCK FUNGI) பாதிப்பு தீவிரம் : டாக்டர் ராதாகிருஷ்ணன்..!! - Tamil Crowd (Health Care)

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை(BLOCK FUNGI) பாதிப்பு தீவிரம் : டாக்டர் ராதாகிருஷ்ணன்..!!

 தமிழகத்தில் கருப்பு பூஞ்சை(BLOCK FUNGI) பாதிப்பு தீவிரம் : டாக்டர் ராதாகிருஷ்ணன்..!!

தமிழகத்தில் CORONA தொற்று குறைந்து வந்தாலும் முழுமையாக நோய்த் தொற்றைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க…

ஆட்குறைப்பு செய்யும் நிறுவனங்கள் மீது- உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..!!  

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள CORONA  தடுப்பூசி மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் திரு டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேற்று 3 லட்சத்து 26 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முகாம் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

நாளொன்றுக்கு பதிவாகும் நோய் எண்ணிக்கையும் 15,000 அளவுக்கு குறைந்து உள்ளது. இது ஒரு நல்ல அறிகுறியாக இருந்தாலும், பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளோம். தடுப்பூசி தான் நிரந்தர தீர்வு.

இந்த செய்தியையும் படிங்க… 

KV(KENDRIYA VIDYALAYA SANGATHAN)- மாணவர் சேர்க்கை கால அட்டவணை JUNE-23 வெளியீடு..!!  

ஒரு நாளைக்கு 100 பேருக்கு 8.6 எனும் அடிப்படையிலே தொற்று பரவல் உள்ளது. தமிழகத்தில் 1,348 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 9,520 கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகள் உள்ளது. கொரோனா இல்லாத 355 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” எனக் கூறினார்.

Leave a Comment