தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை - வாய்ப்பு..!! - Tamil Crowd (Health Care)

தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை – வாய்ப்பு..!!

 தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை – வாய்ப்பு..!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது.

வெப்பச்சலனம்

இந்நிலையில், வெப்பச்சலனம் மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த செய்தியையும் படிங்க…

 Engineering Students  மறு தேர்வுக்கு விண்ணப்பம்: ANNA  UNIVERSITY..!!  

23.5.2021 : 

கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

24.5.2021 : 

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

25 .5.2021 : 

தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதி பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment