தமிழகத்தில் ஒரேநாளில் 2,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை. - Tamil Crowd (Health Care)

தமிழகத்தில் ஒரேநாளில் 2,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை.

 தமிழகத்தில் ஒரேநாளில் 2,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை.

தமிழகத்தில் ஒரேநாளில் 1,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு 1,000க்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து இன்று 2,000ஐ நெருங்கியுள்ளது. இன்று ஒருநாளில் மட்டும் 85,053 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தமிழகத்தில் 1,958, வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 13 பேர் என 1,971 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதில் சென்னையில் மட்டும் 739 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 11,318ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 1,131 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 8,51,222 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று 9 பேர் கொரோனாவால் இறந்தநிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12650ஆக உயர்ந்துள்ளது.

Leave a Comment