தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
தமிழகத்தில்
நீலகிரி,
தேனி,
திண்டுக்கல்,
கிருஷ்ணகிரி,
திருப்பத்தூர்,
வேலூர்,
திருவண்ணாமலை,
கள்ளக்குறிச்சி,
செங்கல்பட்டு,
காஞ்சிபுரம்
மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.