தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு –
சென்னை வானிலை மையம் ..!!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரி ,திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் உள் தமிழக பகுதியின் மேல் நிலவுகின்ற வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக (மார்ச் 27 )முதல் இம்மாதம் 31-ஆம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் போன்றவற்றில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து வருகிற 29-ஆம் தேதி அன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்தோடு காணப்படும்.