தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து- வெளியாகும் தகவல்.!! - Tamil Crowd (Health Care)

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து- வெளியாகும் தகவல்.!!

 வாரம் ஒருமுறை வெந்தய கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும் பசியைப்போக்கவும் பயன்படுகிறது.

வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டு வந்தால் வாய்வு கலைந்து உடல் ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். உடலின் செயலாற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக செயல்பட உதவும். குடலில் உள்ள பூச்சிகளை அகற்ற வெந்தயகீரை பயன்படுகிறது.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒருடம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக்குணமாகும்.

வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும். இந்தக் கீரையை சீமை அத்திப்பழத்துடன் சேர்த்துக் கரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் அவை விரைவில் பழுத்து உடையும்.

வெந்தயக் கீரையோடு, நாட்டுக் கோழி முட்டையில் வெள்ளை கரு, தேங்காய் பால், கசகசா, சீரகம், மிளகு, பூண்டு போன்றவற்றை சேர்த்து சிறிதளவு நெய் கலந்து சமைத்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.

வெந்தய கீரையை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிடுவதன் மூலம் நம் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லைநீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.

வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை. மூலநோய், அதிக அமிலத்தன்மை, உடல் பருமன், முகப்பரு தொல்லை, பொடுகு போன்ற தொல்லைகளுக்கு தீர்வு தரும்.

Leave a Comment