தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிர்ச்சி !!
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அசுர வேகம் எடுத்து வருகிறது.முதல் அலையை விட 2வது அலையால் தினம், தினம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் (17-04-2021) ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 9,344 பேர்.
இந்த செய்தியையும் படிங்க…
உடற்பயிற்சி செய்பவர்களுக்கு கொரோனா தீவிரமாகாது!
இதனால் தமிழகத்தில் மொத்தமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9.82 லட்சம் பேராக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 4,920 பேர் குணமடைந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 13,071ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 2,884 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சென்னையில் மொத்தம் 2,79,300 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,19,76,696 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் இன்று மட்டும் 1 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.
இந்த 5 மாவட்டங்களில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- சென்னை – 2,884 ,
- செங்கல்பட்டு – 807,
- கோவை – 652,
- திருவள்ளூர் – 389,
- திருச்சி – 323,
- சேலம் – 289,
- திருப்பூர் – 275,
- தூத்துக்குடி – 261,
- காஞ்சி – 248,
- நெல்லை – 246,
- மதுரை – 235,
- கிருஷ்ணகிரி – 191,
- கடலூர் – 190,
- வேலூர் – 175,
- ஈரோடு – 143.