தமிழகத்தில் அலை இருக்காது; ஆட்சி மாற்றம் வரும்?: முதல் சுற்றில் வரும் நிலவரம்..!!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முதல் சுற்று முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், திமுக முன்னிலை பெறுகிறது. ஆனால், அடுத்த இடத்தில் அதிமுக நெருங்கி வருகிறது. பெரிய அளவிலான அலையாக இல்லாமல் ஆட்சி மாற்றம் மட்டுமே நடக்கும் என்று தெரிகிறது.
இந்த செய்தியையும் படிங்க……
ஸ்டாலின் அமைச்சரவையில்- இந்த 3 சமூகங்களுக்குத்தான் முக்கியத்துவம்..!!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தபால் வாக்குகள் பதிவாகி அவை எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. தபால் வாக்குகள் இம்முறை வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக பல தொகுதிகளில் அமைய வாய்ப்புள்ளது.
தற்போது வெளியாகும் முதல் சுற்று முடிவு தேர்தல் முடிவுக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது. இதுவரை வெளியான வாக்குகளில் திமுக அதிக இடங்களைப் பிடித்தாலும் பின்னால் தொடரும் அதிமுகவின் வெற்றியும் பெரும் அலை இருக்காது, ஆட்சி மாற்றம் மட்டுமே நிகழும் என்ற கருத்து எழுந்துள்ளது. கடந்த முறைபோல் ஒரு கட்சி ஆட்சியும் வலுவான எதிர்க்கட்சியும் அமையும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.