தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா- தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன்-ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவசர ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி, காணொலி வாயிலாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தினார்.
இதில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நடைபெற்ற அவசர ஆலோசனையில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.