தமிழகத்தின் முக்கிய கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆக.8 வரை தடை..!!
ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 6 மணிவரை ஊரடங்கு:
தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது சற்று அதிகரித்து வரும்நிலையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 6 மணிவரை ஊரடங்கு தளர்வுகளின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியும் படிங்க…
மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்கள் செயல்பட அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தடைவிதிக்கலாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட மாநகராட்சி தடை விதித்துள்ளது.
இந்நிலையில், சென்னை, மதுரை, பழனி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகம் 3-வது கோவிட் அலையை கட்டுப்படுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
மதுரையில் தரிசனத்திற்கு தடை:
இதனையடுத்து மதுரையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில்,மதுரை மீனாட்சி அம்மன்கோவில்,அழகர்கோவில், பழமுதிர்சோலை, ஆகியவற்றில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வரும் 2 ம் தேதி முதல் 9 ம் தேதி வரையில் தடை விதித்து மாவட்ட நிர்வாகம்உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து மதுரை கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில், அழகர்கோவில், பழமுதிர்சோலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய கோவில்களில் நாளை 02.08.2021 முதல் 08.08.2021 வரை நடைபெறவிருக்கும் ஆடி கிருத்திகை நிகழ்வுகள் அனைத்திற்கும் கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக திருக்கோவில் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த செய்தியும் படிங்க…
தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு 20% இடஒதுக்கீடு: தேர்வாளர்களின் விவரங்களை அளிக்க உத்தரவு..!!
மேலும், பொதுமக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக இந்தத் திருவிழா மற்றும் பொது தரிசனத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தரிசனத்திற்கு தடை:
மேலும், சென்னையில் வட பழனி முருகன் கோயில், கந்தகோட்டம் கந்தசாமி கோயில், சூளை அங்காள பரமேஸ்வரி கோயில், பாடி படவேட்டம்மன் கோயில் மற்றும் அம்மன் கோயில்களில் பக்தர்கள் நேரடி தரிசனம் செய்ய தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்தவும், மக்கள் கூடுவதை கட்டுப்படுத்தவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் ஆகமவிதிபடி, கால பக்தர்கள் இன்றி கால பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கலெக்டரும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்:
இதே போல் ஈரோடு கலெக்டரும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரியில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதே போல் திருத்தணி முருகன் கோவிலுக்கு நேற்று முதல் 4-ம் தேதி வரை பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியும் படிங்க…
அரசு ஊழியர்களின் ஒய்வு வயது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்..!!
மேலும் கோவிலில் நடக்கும் விழாக்கள் அனைத்தும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.