தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!
தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு கடந்த 1ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறப்பை அடுத்து மாணவர்கள் கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டுமென்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி முதல் இதற்கு தடை -தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!
இந்நிலையில், பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்:
உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு பள்ளிக்கல்வித்துறை இத உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, “பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பாலியல் சீண்டல்களில் இருந்து மாணவியரை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவியரின் பாதுகாப்புக்கு குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்:
பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்புக்கு பெண் எஸ்.பி., அளவிலான போலீஸ் அதிகாரி, சமூக பாதுகாப்பு அலுவலர், சட்ட அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், உளவியல் நிபுணர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.
பள்ளிகளில் புகார் பெட்டி அமைத்தல், அருகாமையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய தொடர்பு எண்களை பள்ளி வளாகத்தில் வெளியிடுதல் போன்ற பணிகளை துரிதமாக செயல்படுத்த வேண்டும்
பாலியல் சீண்டல்களில் இருந்து மாணவியரை பாதுகாக்க உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.