தனக்கு போதும் என்ற பின்பு தான் பிறருக்கு தானம் என்பதை மறந்துவிடக்கூடாது.!!!- தடுப்பூசி விவகாரம். - Tamil Crowd (Health Care)

தனக்கு போதும் என்ற பின்பு தான் பிறருக்கு தானம் என்பதை மறந்துவிடக்கூடாது.!!!- – தடுப்பூசி விவகாரம்.

 தனக்கு போதும் என்ற பின்பு தான் பிறருக்கு தானம் என்பதை மறந்துவிடக்கூடாது.!!!- – தடுப்பூசி விவகாரம். 

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி விஷயத்தில் மத்திய அரசு மந்தமாக இருப்பதாகவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டு, நம் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி கொடுங்கள் என்ற முழக்கம் டுவிட்டரில் #SpeakUpForVaccinesForAll என்ற ஹேஷ்டாக்கில் இன்று(ஏப்., 12) டிரெண்ட் ஆகிறது.இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. கடந்தாண்டை ஒப்பிடும் போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

 பிரதமர் மோடி, கொரோனா தொற்றை தடுக்க மக்களிடம்- நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்..!!| 

 தற்போது நாள் ஒன்றுக்கு 1.30 லட்சத்திற்கும் அதிகமான பேர் இந்நோயால் நாடு முழுக்க பாதிக்கப்பட்டுள்ளனர். நோயை கட்டுப்படுத்தும் பொருட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், ஊரடங்கு போன்ற விஷயங்களையும் சில மாநில அரசுகள் முன்னெடுத்துள்ளன. அதேப்போன்று கொரோனாவுக்கான தடுப்பூசி பணியும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி விஷயத்தில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதாகவும், மந்தமாக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகின்றன. 

குறிப்பாக நாட்டில் அதிகமாக கொரோனா பரவி உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி மிக குறைந்த விகிதத்திலேயே வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு குற்றம் சாட்டியது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி, முதலில் நம் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்கிவிட்டு, பிறநாட்டுக்கு ஏற்றுமதி செய்யுங்கள்.

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து #SpeakUpForVaccinesForAll என்ற ஹேஷ்டாக்கை தேசிய அளவில் டிரெண்ட் செய்கின்றனர். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் #SpeakUpForVaccinesForAll என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் இன்று டிரெண்ட் ஆனது. இந்த ஹேஷ்டாக்கில் பதிவிட்ட சில கருத்துக்களை இங்கு பார்ப்போம்…* கொரோனா நோய் மீண்டும் வேகமாக பரவி வருகிறது.

இதை கட்டுப்படுத்த அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பூசிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதுவரை மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். 

  • முதலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து நம்மை கையேந்தும் நிலைக்கு உட்படுத்தினார்கள்.
  •  இரண்டாவது ஜிஎஸ்டி மூலம் கையேந்த வைத்தார்கள்.
  • மூன்றாவது ஊரடங்கால் அனைவரையும் வீட்டில் உட்கார வைத்து கையேந்த வைத்தார்கள். 
  • இப்போது தடுப்பூசிக்காக கையேந்த வைக்கிறார்கள்.

  கொரோனா தடுப்பூசிக்காக ஒவ்வொரு இந்தியனும் போராட உரிமை உண்டு. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக இந்தியா உள்ளது.

தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை நிறுத்துங்கள்.  உலகில் மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட இரண்டாவது நாடு இந்தியா என்பது அனைவரும் அறிந்தது. நம் நாட்டு மக்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்காமல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பது வருத்தமான விஷயம். தனக்கு போதும் என்ற பின்பு தான் பிறருக்கு தானம் என்பதை மறந்துவிடக்கூடாது.

 கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது, ஆனால் இந்த அரசாங்கம் அதன் தீவிரத்தை புறக்கணித்து, மக்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது. அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட மோடி அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். கொரோனாவின் இரண்டாவது அலையில் இந்தியா சிக்கி தவிக்கிறது. 

இந்த செய்தியையும் படிங்க…

கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது டோஸ் -ஐ 75 முதல் 90 நாட்களுக்குள் செலுத்திக் கொண்டால் 90% பலன் தரும். | 

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 50 சதவீதம் பாதிப்பு அதிகம். இந்தியா 6.4 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே மற்ற நாட்டினருக்கு ஏற்றுமதி செய்யாமல் தங்கள் நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. ஆனால் இந்தியாவில்….?

Leave a Comment