அரசு அலுவலகங்களில் பணியாற்றும் தட்டச்சர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு அளிக்க திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் தட்டச்சர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு அளிக்க புதிய விதிமுறை அமல்படுத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின்பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் எஸ்.ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அரசாணை:
தமிழ்நாடு அமைச்சுப்பணி விதிமுறையில் தட்டச்சர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு அளிக்கதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, தங்கள் பணிக்குஎவ்வித இடையூறும் இல்லாத வகையில் இளநிலை உதவியாளராக ஓராண்டு பயிற்சி பெறாத எந்த தட்டச்சர்களும் உதவியாளராக பதவி உயர்வுபெற தகுதியில்லை. எனவே, தட்டச்சர்கள் உதவியாளராக பதவி உயர்வு பெற வேண்டுமானால் கண்டிப்பாக ஓராண்டு காலம் இளநிலை உதவியாளராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு பதவி உயர்வு பட்டியலில்உள்ள பதிவுமூப்பின்படி தட்டச்சர்களுக்கு இளநிலை உதவியாளர் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப் பட்டுள்ளது.
பதிவுமூப்பு பட்டியல்:
இதுவரை, பதிவுமூப்பு பட்டியலில் இடம்பெற்ற தட்டச்சர்களுக்கு நேரடியாக உதவியாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.