தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது..!!
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வகை வைரஸ்கள் இப்போது பாகிஸ்தானிலும் பரவத் தொடங்கி உள்ளது. அது சிந்து மாகாணத்தில் அதிகமாக தாக்கி வருகிறது. இந்தியாவில் ஏற்பட்டது போல இந்த வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த பாகிஸ்தான் அரசு முயற்சித்து வருகிறது.
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனா வைரஸ் தடுப்பூசி கேள்விகளும், பதில்களும்..!!
இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்று சிந்து மாகாண முதல்-மந்திரி முராத் அலிஷா அறிவித்துள்ளார். இது சம்பந்தமாக நிதித்துறைக்கு அரசு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.