தடுப்பூசி செலுத்திக்கப் போறீங்களா? இதையெல்லாம் மறக்காதீங்க..!! - Tamil Crowd (Health Care)

தடுப்பூசி செலுத்திக்கப் போறீங்களா? இதையெல்லாம் மறக்காதீங்க..!!

 தடுப்பூசி செலுத்திக்கப் போறீங்களா? இதையெல்லாம் மறக்காதீங்க..!!

இந்தியாவில் கொரோனா அலையின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் பீதியை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் மருத்துவ வசதிகள் கூட கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளார்கள். மறுபுரம், கொரோனா தடுப்பூசி செயல்முறையும் முழு வீச்சில் நடந்துவருகிறது.

இந்த செய்தியையும் படிங்க….

தடுப்பூசிக்கான வலைதள பதிவில்- மருந்தின் வகை, கட்டண விவரங்கள்..!! 

இந்தியாவில் ஒவ்வொரு கட்டமாக மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. முதல் கட்டத்தில், மருத்துவப் பணியாளர்களுக்கும், முன்னணி சுகாதார ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் செயல்முறை துவங்கியது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ( Vaccination) செயல்முறை துவங்கும். இதற்கிடையில் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், தடுப்பூசிகள் குறித்த பல சந்தேகங்களும் மக்களுக்கு இடையில் அதிகமாக உள்ளன. மே 1 முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். இந்த நிலையில், தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகையால், தடுப்பூசி மையங்களிலிருந்து கொரோனா தொற்று பரவக்கூடும் என்ற அச்சமும் மக்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் மத்தியில் பரவலாக உள்ளது.

இந்த நிலையில், கொரோனா (Coronavirus) தடுப்பூசி செலுத்திக்கொள்ள தடுப்பூசி மையங்களுக்கு செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய

 சில முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :

  1. – தடுப்பூசி மையங்களுக்கு நாம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள செல்கிறோம். அங்கு கூட்டம் அதிகமாக இருந்தால், தொற்று பரவும் வாய்புள்ளது. தடுப்பூசியை மற்றும் செலுத்திக்கொள்வோம், தொற்றை பற்றிக்கொள்ள வேண்டாம்.
  2. – முகக்கவசங்கள் (Facemask), கையுறைகள் ஆகியவை கட்டாயம் இருக்க வேண்டும். முகத்தை அடிக்கடி தொடுவதையும், கைகுலுக்குவதையும் செய்ய வேண்டாம்.
  3. – தொற்று பரவும் சாத்தியக்கூறுகளை குறைக்க இரண்டு மாஸ்க்குகளை அணியலாம்.
  4. – கையுறைகளை பயன்படுத்தினாலும் அவற்றையும் சானிடைசர்கள் கொண்டு சானிடைஸ் செய்யவும்.
  5. – பொதுவாக வெளியே எங்கு சென்றாலும், காபி, தேநீர் பருகுவதை தவிர்க்கவும். உங்களுக்குத் தேவையான நீரை பாட்டில்களில் எடுத்துச்செல்லவும், வெளியே குடிக்க வேண்டாம்.
இந்த செய்தியையும் படிங்க….

இது தவிர, யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது என்பது குறித்தும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்து நிறுவனங்கள் தரப்பில் ஃபாக்ட் ஷீட்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

அவற்றின் சுருக்கம் பின்வருமாறு:

  1. – ஒவ்வாமை இருந்தால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டாம்
  2. – முதல் டோஸுக்குப் பிறகு எதிர்வினை இருந்தால், இரண்டாவது டோஸ் போட வேண்டாம்
  3. – கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டாம்.
  4. – பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டாம்.
  5. – மருத்துவ நிலை பற்றிய தகவலை தடுப்பூசி மையத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

Leave a Comment