டோக்கியோ ஒலிம்பிக் போட்டி(2021)க்கு- தகுதி பெற்றுள்ள தமிழக வீரர்கள்..!!
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழ்நாட்டு வீரர் – வீராங்கனைகளுக்கு 3 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் யார் யார் என பார்ப்போம்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தமிழக வீரர்கள்
1. பவானி தேவி – வாள்சண்டை
2. சத்தியன் ஞானசேகரன் – டேபிள் டென்னிஸ்
3. சரத் கமல் – டேபிள் டென்னிஸ்
4. இளவேனில் வாலறிவன் – துப்பாக்கிச் சுடுதல்
5. நேத்ரா குமணன் – பாய்மரப் படகுப்போட்டி
6. கணபதி – பாய்மரப் படகுப்போட்டி
7. வருண் – பாய்மரப் படகுப்போட்டி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் இறுதியாகியுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க….
BREAKING: PLUS TWO வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறை: ஸ்டாலின் வெளியிட்டார்..!!
இதன்படி வாள் வித்தை பிரிவில் பவானி தேவி, டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சத்தியன் ஞானசேகரன், டேபிள் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் சரத் கமல் ஆகியோர் தமிழகத்தில் இருந்து பங்கேற்கின்றனர்.துப்பாக்கி சுடுதல் பிரிவில் இளவேனில் வாலறிவன், பாய்மரப்படகு போட்டியில் மகளிர் பிரிவில் நேத்ரா குமணன் , பாய்மரப்படகு போட்டியில் இணையராக கணபதி, வருண் ஆகியோர் பங்கேற்று விளையாட உள்ளனர்.
இவர்களை உற்சாகமூட்டும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் பங்கேற்று வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். அப்போது பேசிய அவர் ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வெல்வோருக்கு 3 கோடியும், வெள்ளி பதக்கம் வெல்வோருக்கு 2 கோடியும், வெண்கலப் பதக்கம் வெல்வோருக்கு1 கோடி ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்தார்.
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வோருக்கு 3 கோடி ரூபாய் பரிசு என்ற அறிவிப்பு ஊக்கமளிப்பதாக கூறுகிறார் டேபிள் டென்னிஸ் பிரிவில் தகுதி பெற்றிருக்கும் சத்தியன் ஞானசேகரன்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் கனவுகளுடனும் ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கையை சுமந்து கொண்டு ஒலிம்பிக் பங்கேற்க இருக்கும் இந்த வீரர்கள் ,முதலமைச்சர் வாழ்த்தியதை போல தரணியை வென்று வருவார்கள் என தமிழகமும் வாழ்த்தி நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.