டிப்ளமோ தேர்ச்சி -மத்திய அரசு வேலைவாய்ப்பு.
மத்திய அரசிற்கு உட்பட்ட இராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் (MES) காலியாக உள்ள அலுவலக Draughtsman மற்றும் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
தேர்தல் வாக்கு பதிவில் புகார் – ஆசிரியர் பணியிடை நீக்கம்.
மொத்தம் 502 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.12 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
- நிர்வாகம் : இராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனம் (MES)
- மேலாண்மை : மத்திய அரசு
- பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்Draughtsman – 52
- Supervisor – 450
- மொத்த காலிப் பணியிடங்கள் : 502
- கல்வித் தகுதி :
- Draughtsman – Architectural Assistantship துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Supervisor – Economics, Commerce, Statistics, Business, Public Administration போன்ற துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 மாதம்
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
- விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.mesgovonline.com என்ற இணையதளம் மூலம் 12.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
- விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100
- இதர விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
- இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mesgovonline.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.