ஜூன் 30க்குள் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்கவில்லை என்றால்-சம்பளம் கிடைக்காது..!!
ஜூன் 30ஆம் தேதிக்குள் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்கத் தவறும் அனைவருக்கும் எதிராக வருமான வரித் துறை கடுமையான நிலைப்பாட்டை எடுக்கப் போவதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியையும் படிங்க…
ஜூன் 30ஆம் தேதிக்குள் ஊழியர்கள் ஆவணங்களை இணைப்பதை உறுதிபடுத்துமாறு நிறுவனங்களிடம் வருமானவரித்துறை கூறியுள்ளது. மேலும், ஜூன் 30ஆம் தேதியை தாண்டியும் பான் கார்டை ஆதாருடன் இணைக்காத பணியாளர்களுக்கு நிறுவனங்கள் சம்பளம் வழங்கப்போவதில்லை எனவும் கூறப்படுகிறது.
வருமானவரித் துறையின் விதிகளின்படி, இந்த இரண்டு அட்டைகளையும் இணைக்கவில்லை என்றால், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு -139AA இன் கீழ் உங்கள் பான் செல்லாது.
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக வருமானவரித்துறை கடந்த 2020ஆம் ஆண்டு ஆதார் அட்டை மற்றும் பான் இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்தது. தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பும் ஆதார் பான் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளது. பான் அட்டை இணைக்காவிட்டால் வரி செலுத்துதல், டிடிஎஸ்/டிசிஎஸ் வரவு போன்ற பரிவர்த்தனைகளில் சிக்கல் ஏற்பட்டுவிடும்.
2021 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. வருமான வரிச் சட்டம் 234H, 1961இன் படி ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
கோவிட் இணையதளத்தில் முன்பதிவு செய்வதில்-சில தளர்வுகள்:மத்திய அரசு அறிவிப்பு..!!
பான்- ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய..
http://www.incometax.gov.in. என்ற தளத்திற்கு செல்லவும்.
அதில் Our Services க்கு கீழ் Link Aadhaar என்ற option இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
அதில் நுழைந்து உங்கள் பான் எண் மற்றும் ஆதார் எண் டைப் செய்யவும்.
பிறகு View Link Aadhaar Status என்பதை கிளிக் செய்யவும்.
ஏற்கெனவே உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் Your pan is Linked to Aadhaar Number XXXXXXXX என்ற செய்தி கிடைக்கும்.