ஜூன் 3-ல் கொரோனா நிவாரண மளிகை பொருட்கள் விநியோகம்
தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரணமாக 13 வகை மளிகை பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
விவசாயிகள் உதவித்தொகைத் திட்டத்தின் 8-ஆவது தவணை..!!
இது குறித்து கூறப்படுவதாவது:
இந்தியா முழுவதிலும் இரண்டாவது கொரோனா அலை வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வரும் 24 ம் தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் உள்ள சுமார்2.11 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் 13 வகை மளிகை பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இத்திட்டம் வரும் ஜூன் மாதம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று முதல் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.