ஜூன் 1- 6 வரை பழைய இணையதளம் செயல்படாது – அரசு அதிரடி அறிவிப்பு..!!
பழைய இணையதளம் இயங்காது:
வருமான வரி INCOME TAX தாக்கல் செய்வதற்கான இணைய தளம் மாற இருப்பதால் நாளை முதல் ஜூன் 6ஆம் தேதி வரை https://www.incometaxindiaefiling.gov.in என்ற பழைய இணையதளம் இயங்காது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை..!!
புதிய இணையதளம்:
இதுவரை https://www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்து வந்தனர். ஆனால் ஜூன் 7 முதல் www.incometaxgov.in என்ற புதிய இணையதளம் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
மாற்றம் பணிகள்:
தற்போது உள்ள இணையதளம் ஜூன்1- 6 வரை இயங்காது என்றும், பழைய போர்ட்டலில் இருந்து புதிய போர்ட்டலுக்கு மாற்றம் பணிகள் 6 நாட்களில் நிறைவடைந்து ஜூன் 7 முதல் புதிய இணைய தளம் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(INCOME TAX)தாக்கல் செய்வது எளிதாக இருக்கும்:
புதிய வலைதளத்தில் வருமான வரி (INCOME TAX)தாக்கல் செய்வது எளிதாக இருக்கும் என்றும் வருமானவரித்துறை(INCOME TAX OFFICE) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர்ட்டல் மாற்றம் செய்யும் பணிகள் இருப்பதால் புகார்கள், விசாரணைகளுக்கான தீர்வுகளின் தேதியை ஜூன் 10க்கும் பிறகு நிர்ணயித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியையும் படிங்க…
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு-தமிழக அரசு அறிவிப்பு..!!
(INCOME TAX)தாக்குல் செய்வதற்கான தேதியும் நீட்டிப்பு:
இதற்கு ஏற்ப வருமான வரி (INCOME TAX)தாக்குல் செய்வதற்கான தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜூன் 7ஆம் தேதிக்கு பிறகு புதிய இணையதளத்தில் பயனாளர்கள் எளிமையான முறையில் வருமான வரி தாக்கல் செய்யலாம் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.