சேலத்தில்- 4 மையங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது..!!
சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
சேலம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர் மற்றும் மேட்டூர் தொகுதிக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன. எடப்பாடி மற்றும் சங்ககிரி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சங்ககிரி தனியார் கல்லூரியிலும், சேலம் தெற்கு, வீரபாண்டி, ஏற்காடு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சேலம் தனியார் கல்லூரியிலும் நடைபெற உள்ளது. இதேபோன்று, ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி தொகுதிகளுக்கான வாக்குகள் தலைவாசல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எண்ணப்படுகின்றன.
இந்த செய்தியையும் படிங்க……
வாக்கு எண்ணிக்கை: அரசியல் கட்சி- முகவர்கள் யார்..?? பணி என்ன..??
நான்கு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முன்னதாக தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் வாக்குச்சாவடி முகவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அடுத்த கட்டமாக 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது.
இந்த செய்தியையும் படிங்க……
ஸ்டாலின் அமைச்சரவையில்- இந்த 3 சமூகங்களுக்குத்தான் முக்கியத்துவம்..!!
ஒவ்வொரு தொகுதிக்கும், தலா 14 மேஜைகளில் ஒவ்வொரு சுற்றாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன.இதன்படி, எடப்பாடி தொகுதியில் 29 சுற்றுக்கள் வரை வாக்கு எண்ணப்படும். கெங்கவல்லி தொகுதியில் 25 சுற்றும், ஆத்தூர் தொகுதியில் 25 சுற்றும், ஏற்காடு தொகுதியில் 29 சுற்றும், ஓமலூரில் 30 சுற்றும், மேட்டூரில் 29 சுற்றும், சங்ககிரியில் 28 சுற்றும், சேலம் மேற்கு தொகுதியில் 30 சுற்றும், சேலம் வடக்கு தொகுதியில் 29 சுற்றும், சேலம் தெற்கு தொகுதியில் 27 சுற்றும், வீரபாண்டி தொகுதியில் 25 சுற்றுக்கள் வரையிலும் வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி நிலவரம் அறிவிக்கப்பட உள்ளன.