செல்போன் ஹேக்: எச்சரிக்கை; உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை எப்படி அறிவது..??
செல்போன் ஹேக்கிங் என்பது தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது.
- ஒரு நாள், 2 நாள் சார்ஜ் நிற்கும் உங்கள் செல்போனில் அண்மை காலமாக பேட்டரி விரைவாக தீர்ந்து விடுகிறதா..? ஆம் என்றால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
- செல்போனில் பேட்டரி விரைவாக தீர்ந்து போவது செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதன் அறிகுறியே.
- எனினும், இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு வேறு செயலிகள் ஏதாவது பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கிறதா என்பதையும் ஆராயுங்கள்.
- பின்னணியில் பல்வேறு செயலிகள் இயங்கிக் கொண்டிருந்தாலும் செல்போனின் பேட்டரி விரைவாக தீர்ந்துவிடும்.
- செல்போனை பயன்படுத்தும் போது நீங்கள் பதிவிறக்கம் செய்யப்படாத செயலிகள் ஏதாவது உங்கள் செல்போனில் இருப்பதை பார்த்திருக்கலாம். இதுவும் ஹேக்கர் அல்லது ஸ்பைவேரின் வேலையாக இருக்கலாம்.
- செல்போனில் வேகம் திடீரென குறையும். சில சமயங்களில் செல்போன் தானாக அணைந்து ரீ ஸ்டார்ட் ஆகும். இதுவும் ஹேக் செய்யப்பட்டதன் அறிகுறியாக இருக்கலாம்.
- நீங்கள் உங்கள் செல்போனை அதிகம் பயன்படுத்தாத போதும் அதன் டேட்டா பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது என்பதும் ஹேக்கின் அறிகுறிதான்.
- இதற்கு காரணமாக உங்கள் செல்போனில் உள்ள ஹேக்கிங் செயலிகள் இந்தளவு அதிக டேட்டாவை பயன்படுத்தி வரலாம்.
- உங்கள் செல்போன் விசித்திரமாக செயல்படக் கூடும்.
- செயலிகள் திடீரென செயல்படாமல் போகலாம் அல்லது இயங்க நீண்ட நேரம் எடுக்கலாம்.
- பல தளங்கள் வழக்கமாக இருப்பதை விட வித்தியாசமாக காணப்படும்.
- உங்கள் செல்போன் திரையில் ஏராளமான பாப்-அப் (Pop-up) தோன்றுவதை நீங்கள் பார்த்திருந்தால், அதுவும் ஹேக் செய்யப்பட்டதன் அறிகுறிதான்.
- ஏராளமான விளம்பர லிங்க் உங்கள் திரையில் தோன்றும். இத்தகைய லிங்கை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்து விட வேண்டாம்.
- நீங்கள் எடுக்காத புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் உங்கள் செல்போன் கேலரியில் இருக்கக் கூடும்.
- உங்கள் செல்போன் கேமரா வேறு ஒரு நபரின் கட்டுப்பாட்டில் இருக்கலாம் என்பதன் அறிகுறி இது என்பதால் மிக கவனமாக இருங்கள்.
- நீங்கள் செல்போனை பயன்படுத்தாத போதும் அதன் ஃபிளாஷ் லைட் தானாக ஆன் ஆகிறதா? உங்கள் செல்போன் வேறு யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதன் அறிகுறி இது.
- நீண்ட நேரம் கேம் விளையாடும் போதும், வீடியோ பார்க்கும் போதும் செல்போன் உஷ்ணம் ஆவது என்பது இயல்புதான். ஆனால், நீங்கள் பயன்படுத்தாத போது உங்கள் செல்போன் அதிக உஷ்ணம் ஆகிறது என்றால், செல்போன் ஹேக் செய்யப்பட்டு இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
- நீங்கள் மேற்கொள்ளாத அழைப்புகள், நீங்கள் அனுப்பாத குறுஞ்செய்திகள் ஆகியவை உங்கள் செல்போனில் காணப்பட்டால், அவையும் ஹேக் செய்யப்பட்டதன் அறிகுறியே ஆகும்.