சென்னை மாவட்டத்தில் :இலவச தையல் இயந்திரத்தைப் பெற விண்ணப்பிக்கலாம்..!!
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவாக, தமிழக அரசால் இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இந்த தையல் இயந்திரத்தைப் பெற தற்போது சென்னை மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஏழைப் பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த தையல் இயந்திரத்தைப் பெற விண்ணப்பிக்கலாம்.
இந்த செய்தியும் படிங்க…
அதிகாலையில் சாப்பிட வேண்டிய -சத்தான உணவுகள்..!!
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; ‘சென்னை மாவட்டத்தில், சமூக நலத்துறையின் கீழ் 2021 – 2022ம் நிதியாண்டிற்கு ‘சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம்’ வழங்கப்பட உள்ளது. தகுதியுடைய பெண்கள் கீழே குறிப்பிட்டுள்ள சான்றுகளுடன் சென்னை மாவட்ட சமூக நல அலவலகத்தில் 25-06-2021 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1. வருமானச் சான்று: ரூ.72,000க்குள் இருத்தல் வேண்டும்.
2. பிறந்த தேதிக்கான வயது சான்று (வயது 20 முதல் 40 வரை இருத்தல் வேண்டும்)
3. விதவையாக இருப்பவராயின் அதற்கான சான்று ( ஆதரவற்ற விதவை சான்று வட்டாச்சியரிடமிருந்து பெற வேண்டும்)
4. சாதி சான்று
5. கணவரால் கைவிடப்பட்டவராயின் அதற்கான சான்று
(வட்டாச்சியரிடமிருந்து பெற வேண்டும்)
6. தையல் தெரியும் என்பதற்கான சான்று (6 மாதம் பயிற்சி முடித்திருக்க வேண்டும்)
7. குடும்ப அட்டை
8. ஆதார் கார்டு
மேற்கூறிய சான்றுகளின் நகல்களுடன் கீழ்க்கண்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மாவட்ட சமூக நல அலுவலகம்,
சிங்காரவேலர் மாளிகை,
எட்டாவது தளம், இராஜாஜி சாலை,
சென்னை – 600001
இவ்வாறு அந்த செய்தி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியும் படிங்க…
PAN CARD தொலைந்தால் 5 நிமிடத்தில் பெறலாம்.! EASY STEPS ONLY..!!